சென்னை, நவ.10 (டிஎன்எஸ்) பெரிய பெரிய ஹிட் கொடுத்து, பல நடிகர்களை உருவாக்கிய இயக்குநர் கே.பாக்யராஜ் தம் மகன் சாந்தனுவை ஹீரோவாக வைத்து இயக்கிய முதல் படம் 'சித்து +2'. எதோ காரணத்தினால் வெளியாகாமல் இருந்த இப்படம் நவம்பர் 26ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த செய்தியை அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்த பாக்யராஜ் "எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் நேரம் சரியில்லனா இப்படித்தான். எனக்கும் அப்படித்தான் அமைந்தது சித்து படம். அனைத்தும் சரியாக இருந்தும் இப்படம் வெளியாக இவ்வளவு சிக்கல் அது என்ன என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை" என்று வருத்தப்பட்டு பேசிய கே.பாக்யராஜ், தனது நகைச்சுவை பாணியில் இதற்கு உதாரணமாக தனது பழைய அனுபவத்தையும் கூறினார்.
தனது டிபிக்களான திரைக்கதையில் இருந்து சற்று மாறுபட்டு திரைக்கதை அமைத்திருக்கும் பாக்யராஜ், இப்படத்தை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார். படத்தின் திரை முன்னோட்டத்தை பார்க்கும்போதே அது தெரிந்தது. (டிஎன்எஸ்)
Blog Archive
Popular Posts
-
Allu Arjun will tied the knot to Sneha Reddy on March 6, 2011 at the Hyderabad International Trade Exposition Centre in Hyderabad, India. ...
-
Sachin Tendulkar and his son Arjune Family Wallpapers photos Dubai World Cricket Ground Wallpapers Cute Rare Anjali Tendulkar family ...
-
WWE Superstar Undertaker Undertaker Stylish undertaker with Stars Undertaker with Axe undertaker with another axe undertaker famous style u...
-
Kajal Agarwal, having consolidated her position as one of the most sought-after contemporary heroines, is now moving towards Bollywood. Afte...
-
Salman Khan, Asin, paresh rawal, Arya Babbar, Mahesh Manjrekar,Director: Anees Bazmee,Music: Pritam Chakraborty Actress Asin in Orange Sudi...
Google Search
Friday, November 12, 2010
நேரம் சரியில்லனா இப்படித்தான் வருத்தப்படும் பாக்யராஜ்
இயக்குநர்கள் சங்கப் பதவியில் இருந்து விக்ரமன் விலகல்
சென்னை, நவ.11 (டிஎன்எஸ்) தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்த இயக்குநர் விக்ரமன், தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
1200க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு செயல்படும் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இயக்குநர் பாராதிராஜா தலைவராக இருக்கிறார். துணைத் தலைவராக இயக்குநர் விக்ரமன் பதவி வகித்து வந்தார். செயலாளராக ஆர்.கே.செல்வமணியும், பொருளாளாராக எழிலும் பதவி வகித்து வந்தார்கள்.
அண்மையில்தான் இயக்குநர்கள் சங்கம் நாற்பதாவது ஆண்டு நிறைவு விழாவை 'டி40' என்ற பெயரில் வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இந்த நிலையில் இயக்குநர் விக்ரமன் திடீர் என்று தனது பதவியை ராஜினாம செய்திருக்கிறார். இயக்குநர்கள் சங்கம் நடத்திய விழாவில் ஏற்பட்ட கருத்து மோதல்கள் இதுபோன்ற ராஜினாமாக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ராஜினாமா கடிதத்தை செயலாளர் ஆர்.கே.செல்வமணிக்கு அனுப்பி வைத்திருக்கும் விக்ரமன், தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சொந்த வேலை காரணமாகவும் தனது பதவியை ராஜினாமா செய்வதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். (டிஎன்எஸ்)