
சென்னை, நவ.10 (டிஎன்எஸ்) பெரிய பெரிய ஹிட் கொடுத்து, பல நடிகர்களை உருவாக்கிய இயக்குநர் கே.பாக்யராஜ் தம் மகன் சாந்தனுவை ஹீரோவாக வைத்து இயக்கிய முதல் படம் 'சித்து +2'. எதோ காரணத்தினால் வெளியாகாமல் இருந்த இப்படம் நவம்பர் 26ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த செய்தியை அதிகாரபூர்வமாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவித்த பாக்யராஜ் "எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் நேரம் சரியில்லனா இப்படித்தான். எனக்கும் அப்படித்தான் அமைந்தது சித்து படம். அனைத்தும் சரியாக இருந்தும் இப்படம் வெளியாக இவ்வளவு சிக்கல் அது என்ன என்று எனக்கு இன்றுவரை தெரியவில்லை" என்று வருத்தப்பட்டு பேசிய கே.பாக்யராஜ், தனது நகைச்சுவை பாணியில் இதற்கு உதாரணமாக தனது பழைய அனுபவத்தையும் கூறினார்.
தனது டிபிக்களான திரைக்கதையில் இருந்து சற்று மாறுபட்டு திரைக்கதை அமைத்திருக்கும் பாக்யராஜ், இப்படத்தை இளைஞர்களுக்கு பிடிக்கும் வகையில் இயக்கியிருக்கிறார். படத்தின் திரை முன்னோட்டத்தை பார்க்கும்போதே அது தெரிந்தது. (டிஎன்எஸ்)